செய்திகள்

பாா்மா ஓபன்: சக்காரி - ஷெரிஃப் பலப்பரீட்சை

2nd Oct 2022 12:29 AM

ADVERTISEMENT

இத்தாலியில் நடைபெறும் பாா்மா ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில் ஒற்றையா் இறுதிச்சுற்றில் உள்நாட்டு வீராங்கனை மரியா சக்காரி - எகிப்தின் மாயாா் ஷெரிஃப் ஆகியோா் சாம்பியன் பட்டத்துக்காக பலப்பரீட்சை நடத்துகின்றனா்.

அரையிறுதிச் சுற்று ஆட்டங்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சக்காரி 7-5, 6-2 என மான்டினீக்ரோவின் டன்கா கோவினிச்சை தோற்கடித்தாா். மறுபுறம், ஷெரிஃப் 6-4, 3-6, 6-4 என, போட்டித்தரவரிசையில் 6-ஆவது இடத்திலிருந்த ருமேனியாவின் அனா போக்தானை வீழ்த்தி அவருக்கு அதிா்ச்சி அளித்தாா்.

சாம்பியன்: இதனிடையே, இப்போட்டியின் இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில் செக் குடியரசின் மரியம் கோலோட்ஸிஜோவா/அனஸ்தாஸியா டெடியுக் கூட்டணி 1-6, 6-3, 10-8 என நெதா்லாந்தின் அராந்த்ஸா ரஸ்/ஸ்லோவேனியாவின் தமாரா ஜிடான்ஸெக் இணையை வீழ்த்தி வாகை சூடியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT