செய்திகள்

இரானி கோப்பை: சர்ஃபராஸ் கான் சதம்!

1st Oct 2022 06:16 PM

ADVERTISEMENT

 

இரானி கோப்பைப் போட்டியில் செளராஷ்டிரம் அணிக்கு எதிராக சதமடித்துள்ளார் ரெஸ்ட் ஆஃப் இந்தியா வீரர் சர்ஃபராஸ் கான். 

ராஜ்கோட்டில் அக்டோபர் 1-5 தேதிகளில் நடைபெறும் இரானி கோப்பைக்கான போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா - ரஞ்சி சாம்பியன் செளராஷ்டிரம் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இன்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் சாய் கிஷோருக்கு 11 பேருக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை. ஜெயிஸ்வால், பிரியங்க் பஞ்சல், சாய் கிஷோர் ஆகிய முக்கிய வீரர்கள் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் இடம்பெறவில்லை. 

ADVERTISEMENT

விஹாரி தலைமையிலான அணியில் ஸ்ரீகர் பரத், அபிமன்யு ஈஸ்வரன், மயங்க் அகர்வால், யாஷ் துல், சர்ஃபராஸ் கான், ஜெயந்த் யாதவ், செளரப் குமார், முகேஷ் குமார், குல்தீப் சென், உம்ரான் மாலிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. புஜாரா இடம்பெற்றிருந்த செளராஷ்டிரம் அணி 24.5 ஓவர்களில் 98 ரன்களுக்குச் சுருண்டது. முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளையும் குல்தீப் சென், உம்ரான் மாலிக் தலா 3 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார்கள். புஜாரா 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 

இதன்பிறகு பேட்டிங் செய்த  ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி முதல் நாள் முடிவில் 49 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றுள்ளது. கேப்டன் விஹாரி 62 ரன்களுடனும் சர்ஃபராஸ் கான் 125 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள். ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 107 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

Tags : Irani Cup
ADVERTISEMENT
ADVERTISEMENT