செய்திகள்

உலகக் கோப்பை 9-ம் நாள்: பரபரப்பான ஆட்டங்களின் கோல்கள் (விடியோ)

29th Nov 2022 11:56 AM

ADVERTISEMENT

 

கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் பிரேசில், போர்ச்சுகல், கானா ஆகிய அணிகள் வெற்றி பெற்றன. கேமரூன் - செர்பியா ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

உருகுவே அணியை 2-0 என வீழ்த்தியது போர்ச்சுகல். முதல் ஆட்டத்தில் கானாவை 3-2 என வீழ்த்தியது போர்ச்சுகல். டிசம்பர் 2 அன்று தனது கடைசி ஆட்டத்தில் தென் கொரியாவை எதிர்கொள்கிறது. 

பிரேசில் அணி, ஸ்விட்சர்லாந்தை 1-0 என வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றது. இதையடுத்து பிரேசில், பிரான்ஸ், போர்ச்சுகல் ஆகிய மூன்று அணிகளும் இரு ஆட்டங்களிலேயே காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளன.

ADVERTISEMENT

கேமரூன் - செர்பியா அணிகளுக்கு இடையிலான பரபரப்பான ஆட்டம் 3-3 என டிராவில் முடிவடைந்தது. 29-வது நிமிடத்தில் கேமரூன் அணி முதல் கோலடித்தது. ஆனால் முதல் பாதி முடிவடைவதற்கு செர்பிய அணி இரு கோல்களை அடித்து முதல் பாதியின் முடிவில் 2-1 என முன்னணியில் இருந்தது. பிறகு 53-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோலடித்து 3-1 என அபாரமான முன்னிலை பெற்றது. ஆனால் 63 மற்றும் 66-வது நிமிடங்களில் கோல்கள் அடித்து 3-3 என ஆட்டத்தைச் சமனுக்குக் கொண்டு வந்தது கேமரூன். கடைசி ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

மற்றொரு பரபரப்பான ஆட்டத்தில் தென் கொரியாவை கானா 3-2 என வென்றது. முதலில் இரு கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது கானா. இதன்பிறகு தென் கொரிய அணி அடுத்தடுத்து இரு கோல்களை அடித்து 2-2 என சமன் செய்தது. இதனால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பானது. 68-வது நிமிடத்தில் கானா அணி மற்றொரு கோலை அடித்து கடைசியில் 3-2 என அட்டகாசமான வெற்றியை அடைந்தது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT