செய்திகள்

உலகக் கோப்பை: கானா வரலாற்று வெற்றி! 

28th Nov 2022 09:31 PM

ADVERTISEMENT

2022 கால்பந்து போட்டி கத்தாரில் நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது. லீக் சுற்றில் 12 நாள்களுக்குத் தினமும் நான்கு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிந்து களமிறங்குகின்றன. குரூப் எச் பிரிவில் கானா , தொன் கொரியா அணிகள் மோதியது. 

முதல் பாதி ஆட்டத்தில் கானா அணி 2 கோல்களை அடித்தது. தென் கொரியா அணி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. பின்னர் 58வது, 61 வது நிமிடங்களில் தொடர்ந்து ஒரு கோலடித்து அசத்தியது தென் கொரிய அணி. 

68வது நிமிடத்தில் கானாவை சேர்ந்த வீரர் மொஹமது குடுஸ் 3வது கோலை அடித்து அசத்தினார். கடைசி வரை போராடியும் தென் கொரியா அணியினால் அடுத்த கோலை அடிக்க முடியவில்லை. 

ADVERTISEMENT

3-2 என கானா அணி வெற்றி பெற்றது.  உலகக் கோப்பை போட்டி வரலாற்றில் ஒரே போட்டியில் 3 கோல்களை அடிப்பது கானா அணிக்கு இதுவேமுதன்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT