செய்திகள்

உலகக் கோப்பை: கேமரூன் - செர்பியா ஆட்டம் டிரா!

28th Nov 2022 05:43 PM

ADVERTISEMENT

 

கத்தாரில் நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பையில் கேமரூன் - செர்பியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 3-3 என டிராவில் முடிவடைந்தது.

முதல் ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்திடம் 0-1 எனத் தோற்றது கேமரூன். அதேபோல செர்பியா தனது முதல் ஆட்டத்தில் பிரேசிலிடம் 0-2 எனத் தோற்றது. அதனால் இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் முதல் வெற்றி தேவைப்பட்டன. 

29-வது நிமிடத்தில் கேமரூன் அணி முதல் கோலடித்தது. ஆனால் முதல் பாதி முடிவடைவதற்கு செர்பிய அணி இரு கோல்களை அடித்து முதல் பாதியின் முடிவில் 2-1 என முன்னணியில் இருந்தது. பிறகு 53-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோலடித்து 3-1 என அபாரமான முன்னிலை பெற்றது. ஆனால் 63 மற்றும் 66-வது நிமிடங்களில் கோல்கள் அடித்து 3-3 என ஆட்டத்தைச் சமனுக்குக் கொண்டு வந்தது கேமரூன். இதனால் ஆட்டம் மிகவும் பரபரப்பானது. இறுதியில் எந்த அணியாலும் மேலும் கோலடிக்க முடியாததால் ஆட்டம் 3-3 என டிரா ஆனது. எனவே கடைசி ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT