செய்திகள்

உலகக் கோப்பை: இன்றைய ஆட்டத்திலும் ஆர்ஜென்டீனா தோற்றால் என்ன ஆகும்?

26th Nov 2022 02:13 PM

ADVERTISEMENT

 

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் ஆர்ஜென்டீனாவை 2-1 எனத் தோற்கடித்து அதிர்ச்சி ஏற்படுத்தியது சவூதி அரேபியா. அதற்கு முன்பு 35 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்று வந்த ஆர்ஜென்டீனா திடீரென சவூதி அரேபியாவிடம் தோற்றது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 1978, 1986-ல் உலகக் கோப்பையை வென்றது ஆர்ஜென்டீனா. 2014-ல் 2-ம் இடம்பெற்ற ஆர்ஜென்டீனா, 2018-ல் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சாம்பியன் பிரான்ஸிடம் 3-4 எனத் தோற்றது. 

முதல் ஆட்டத்தில் தோற்றதால் தற்போது நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது ஆர்ஜென்டீனா. இன்றிரவு 12.30 மணிக்கு (அதாவது நவம்பர் 27 அதிகாலையில்) நடைபெறும் ஆட்டத்தில் மெக்ஸிகோவை எதிர்கொள்கிறது. 1990-ல் கேமரூனுக்கு எதிராகத் தோற்ற மரடோனாவின் ஆர்ஜென்டீனா அணி அதன்பிறகு நன்கு விளையாடி இறுதிச்சுற்று வரை முன்னேறியது. அதேபோல முதல் ஆட்டத்தில் கிடைத்த தோல்வியிலிருந்து ஆா்ஜென்டீனா அணி மீண்டு வரவேண்டும் என விரும்புகிறார்கள் ரசிகர்கள். ஆா்ஜென்டீனாவுக்கு உலகக் கோப்பை வென்று தரும் தனது கடைசி முயற்சியில் இருக்கும் 35 வயது மெஸ்ஸி, இந்த ஆட்டத்தில் நிச்சயம் விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த உலகக் கோப்பையில் முதல் ஆட்டத்தில் 0-0 என போலந்துக்கு எதிராக டிரா செய்தது மெக்ஸிகோ. அதனால் இன்றைய ஆட்டத்தில் தோற்றாலும் போட்டியிலிருந்து வெளியேறாது. 1986-க்குப் பிறகு மெக்ஸிகோ அணி காலிறுதிக்குத் தகுதியடைந்ததில்லை. அதிக முறை (17) உலகக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்று அதிக (57) ஆட்டங்களில் விளையாடி உலகக் கோப்பையை வெல்லாத ஒரே அணி மெக்ஸிகோ தான். எனவே இன்றைய ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா வெல்லும் என்பதே பலருடைய எதிர்பார்ப்பாக உள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT