செய்திகள்

ஆர்சிபி தக்கவைத்துள்ள வீரர்கள்: பயிற்சியாளர் திருப்தி

18th Nov 2022 04:44 PM

ADVERTISEMENT

 

கடந்த ஐபிஎல் ஏலத்தில் வீரர்களைத் தேர்வு செய்தது பற்றி ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் பேட்டியளித்துள்ளார். 

ஐபிஎல் 2022 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றது. இந்நிலையில் டிசம்பர் 23 அன்று ஐபிஎல் ஏலம் நடைபெறுவதால் அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. கேன் வில்லியம்சன், பிராவோ, மயங்க் அகர்வால் உள்ளிட்ட பல பிரபல வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். ஒருசில வீரர்களைத் தவிர பெரும்பாலான வீரர்களை ஆர்சிபி அணி தக்கவைத்துள்ளது. 

இந்நிலையில் ஆர்சிபி அணியின் தலைமைப் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் ஒரு பேட்டியில் கூறியதாவது:

ADVERTISEMENT

ஒரு பெரிய ஏலத்துக்குப் பிறகு வரும் அடுத்தப் பருவம் சுவாரசியமானது. பெரிய ஏலத்தில் தேர்வு செய்த வீரர்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளலாம். அதனால் தான் வீரர்களைத் தேர்வு செய்வதற்கு உண்டான பணிகள் மிகவும் முக்கியமானவை என நான் கருதுகிறேன். கடந்த பருவத்தில் இருந்த 23 வீரர்களில் 18 வீரர்களை நாங்கள் தக்கவைத்துள்ளோம். இது எங்களுடைய பணிகள் சரியாக இருந்ததாகத் தெரிகிறது. இது தொடரவேண்டும். அப்போது தான் நாம் தொடர்ச்சியாக நன்றாக விளையாட முடியும். சரியான வீரர்களைத் தேர்வு செய்து அவர்களை வளர்க்க வேண்டும். இதுதான் எங்களுடைய குறிக்கோள். இந்த வருடம் வேறுவழியில்லாமல் சில வீரர்களை வெளியேற்றியுள்ளோம். அணி வீரர்களுடனான உரையாடல், பயிற்சிகள் அவர்களுக்கு உதவியாக இருந்திருக்கும் என நம்புகிறேன் என்றார். 
 

Tags : RCB IPL
ADVERTISEMENT
ADVERTISEMENT