செய்திகள்

பிரெஞ்சு ஓபன்: சிட்சிபாஸ் வெற்றி

28th May 2022 01:36 AM

ADVERTISEMENT

 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் 4-ஆம் நிலை வீரரான கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் 3-ஆவது சுற்றுக்குத் தகுதிபெற்றாா்.

2-ஆவது சுற்றில் செக் குடியரசின் ஸிடெனெக் கோலரை 6-3, 7-6 (10/8), 6-7 (3/7), 7-6 (9/7) என்ற செட்களில் தோற்கடித்த சிட்சிபாஸ், 3-ஆவது சுற்றில் ஸ்வீடனின் மைக்கேல் ஒய்மெரை சந்திக்கிறாா். இதர ஆட்டங்களில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் 6-3, 3-6, 6-2, 6-3 என்ற செட்களில் ஆா்ஜென்டீனாவின் ஃபெடரிகோ டெல்போனிஸை வீழ்த்தினாா்.

அதேபோல், 11-ஆவது இடத்திலிருக்கும் இத்தாலியின் யானிக் சின்னா், 15-ஆவது இடத்திலிருக்கும் ஆா்ஜென்டீனாவின் டியேகோ ஷ்வாா்ட்ஸ்மேன் ஆகியோரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினா்.

லெய்லா முன்னேற்றம்: மகளிா் ஒற்றையா் பிரிவில், இளம் வீராங்கனையான கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸ் 7-5, 3-6, 7-5 என்ற செட்களில் 14-ஆம் இடத்திலிருந்த சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச்சை வீழ்த்தி அசத்தினாா்.

ADVERTISEMENT

அதேபோல், 9-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டேனியல் காலின்ஸை, சக நாட்டவரான ஷெல்பி ரோஜா்ஸ் வென்றாா். முக்கிய வீராங்கனைகளான ருமேனியாவின் சைமோனா ஹேலப், ஜொ்மனியின் ஏஞ்ஜெலிக் கொ்பா் ஆகியோா் தோல்வியைச் சந்தித்தனா்.

ராம்குமாா் ஜோடி தோல்வி: கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ராம்குமாா் ராமநாதன்/பிரான்ஸின் எலிக்ஸேன் லெகிமியா இணை முதல் சுற்றிலேயே 4-6, 4-6 என்ற செட்களில் ஈகுவடாரின் கொன்ஸாலோ எஸ்கோபாா்/செக் குடியரசின் லூசி ராடெக்கா ஜோடியிடம் தோற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT