செய்திகள்

பிரெஞ்சு ஓபன்: சக்காரி தோல்வி; சிட்சிபாஸ் வெற்றி

DIN

பாரீஸ்: கிராண்ட்ஸ்லாம்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் போட்டியில் முக்கிய வீராங்கனையான கிரீஸின் மரியா சக்காரி தோல்வியைத் தழுவினார். ஆடவர் பிரிவில் சக நாட்டவரான ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றார். 
மகளிர் ஒற்றையரில், 4-ஆம் இடத்திலிருந்த சக்காரி 6-7 (5/7), 6-7 (4/7) என்ற செட்களில் செக் குடியரசின் கரோலினா முசோவாவிடம் தோற்றார். போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் பெலாரஸின் அரினா சபலென்கா 2-6, 6-3, 6-4 என்ற செட்களில் பிரான்ஸின் கிளோ பேக்கெட்டை வீழ்த்தினார். 
இதர ஆட்டங்களில், 12-ஆம் இடத்திலிருந்த இங்கிலாந்தின் எம்மா ரடுகானு 6-3, 1-6, 1-6 என்ற செட்களில் ரஷியாவின் அலெக்ஸாண்ட்ரா சாஸ்னோவிச்சிடம் வெற்றியை இழந்தார். மற்றொரு இளம் வீராங்கனையான கனடாவின் லெய்லா ஃபெர்னாண்டஸ் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் செக் குடியரசின் காட்டெரினா சினியாகோவாவை வென்றார். 
இவர்கள் தவிர பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டன்ஸ், அமெரிக்காவின் கோகோ கெளஃப், ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர், பெலாரஸின் விக்டோரியா அஸரென்கா, சுவிட்ஸர்லாந்தின் ஜில் டெய்ச்மான் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்குத் தகுதிபெற்றனர். 
சிட்சிபாஸ், அலியாசிமே முன்னேற்றம்: இப்போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் முதல் சுற்றில் 5-7, 4-6, 6-2, 6-3, 6-2 என்ற செட்களில் விடாமல் போராடி இத்தாலியின் லோரென்úஸா முசெட்டியை வெளியேற்றினார். 
9-ஆம் இடத்திலிருக்கும் கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகர் அலியாசிமே 6-0, 6-3, 6-4 என்ற செட்களில் ஆர்ஜென்டீனாவின் கேமிலியோ யுகோ கராபெலியை வீழ்த்தி 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். 16-ஆவது இடத்திலிருந்த ஸ்பெயினின் பாப்லோ கரீனோ பஸ்டா 4-6, 4-6, 6-4, 6-1, 4-6 என்ற செட்களில் பிரான்ஸின் கில்லெஸ் சைமனிடம் முதல் சுற்றில் போராடி வீழ்ந்தார். 
அமெரிக்காவின் ஜான் இஸ்னர், ரஷியாவின் காரென் கசானோவ், இங்கிலாந்தின் கேமரூன் நோரி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்குத் தகுதிபெற்றனர். 
2-ஆவது சுற்றில் ராம்குமார்: ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியரும், தமிழருமான ராம்குமார் ராமநாதன்/அமெரிக்காவின் ஹன்டர் ரீஸ் இணை 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது. முதல் சுற்றில் அந்த இணை 7-6 (7/4), 6-3 என்ற செட்களில் ஜெர்மனியின் டேனியல் ஆல்ட்மெய்ர்/ஆஸ்கர் ஆட்டே ஜோடியை தோற்கடித்தது. கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இரட்டையர் பிரிவில் பிரதான சுற்றில் ராம்குமாருக்கு இது முதல் வெற்றியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் ‘ஸ்மோக்’ வகை உணவுகள் விற்பனைக்குத் தடை: மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம்

மேகாலய துணை முதல்வா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பேருந்துகள் பராமரிப்பு - சீரான மின் விநியோகம்: தலைமைச் செயலா் ஆலோசனை

கடும் வெப்பம்: தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு வலியுறுத்தல்

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT