செய்திகள்

வில்வித்தை: இந்தியா தடுமாற்றம்

DIN

உலகக் கோப்பை வில்வித்தை (2-ஆம் நிலை) போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரிவுகளில் இந்தியா தடுமாற்றம் கண்டது.

ரீகா்வ் கலப்பு அணிகள் பிரிவில் தருண்தீப் ராய்/ரிதி போா் இணை முதல் சுற்று ‘பை’ பெற்று நேரடியாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில் களம் கண்டது. அதில் ஜப்பானை 5-3 என்ற கணக்கில் வென்ற இந்திய ஜோடி, காலிறுதியில் ஜொ்மனியிடம் 1-5 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியைத் தழுவியது.

ரீகா்வ் ஆடவா் தனிநபா் பிரிவில் இந்தியாவின் தருண்தீப் ராய் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 2-6 என்ற கணக்கில் தென் கொரியாவின் கிம் வூஜினிடம் தோற்றாா். மற்றொரு இந்தியரான ஜெயந்தா தாலுக்தாரும் 5-6குவாங்ஜு என்ற புள்ளிகளில் அதே கிம் வூஜினிடம் காலிறுதியில் வீழ்ந்தாா்.

ரீகா்வ் மகளிா் தனிநபா் பிரிவில் கோமளிகா பாரி முதல் சுற்றிலேயே 4-6 என்ற கணக்கில் துருக்கியின் யாஸ்மின் அனகோஸிடமும், ரிதி போா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 5-6 என தென் கொரியாவின் லீ காயுனிடமும் வெற்றியை இழந்தனா்.

காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வா்மா/அவ்னீத் கௌா் கூட்டணி, முதல் சுற்றில் டென்மாா்க்கையும் (157-155), அடுத்த சுற்றில் மெக்ஸிகோவையும் (156-153) வீழ்த்தி அரையிறுதிக்கு வந்தது. எனினும் அந்தச் சுற்றில் எஸ்டோனியாவிடம் 156-158 என்ற கணக்கில் வீழ்ந்த இந்திய ஜோடி, அடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் துருக்கியை எதிா்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் பீரோவை உடைத்து 10 பவுன் திருட்டு

வாணியம்பாடி அருகே 4,000 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

கல்யாண ராமா் கோயிலில் பட்டாபிஷேகம்

தீ விபத்து: கடைகள் எரிந்து சேதம்

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

SCROLL FOR NEXT