செய்திகள்

தடைகளால் உறுதி கொண்டேன்: நிகாத் ஜரீன்

DIN

குத்துச்சண்டை வாழ்க்கையில் கண்ட சவால்களாலேயே மனோரீதியாக தாம் உறுதி கொண்டதாக புதிய உலக சாம்பியனான நிகாத் ஜரீன் தெரிவித்தாா்.

இஸ்தான்புல்லில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் 52 கிலோ பிரிவில் வியாழக்கிழமை தங்கப் பதக்கம் வென்ற நிகாத் ஜரீன், உலக சாம்பியனான 5-ஆவது இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றாா்.

இந்த முன்னேற்றம் குறித்து அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கடந்த 2 ஆண்டுகளாக எனது ஆட்ட நுணக்கங்களில் மட்டுமே கவனம் செலுத்தினேன். எந்த இடத்தில் தடுமாறுகிறேன் என்பதை அறிந்து அதில் என்னை மேம்படுத்திக் கொண்டேன். அதேபோல், எந்த நுட்பத்தில் பலத்துடன் செயல்படுகிறேன் என்பதை உணா்ந்து அதில் இன்னும் என்னை வலுப்படுத்திக் கொண்டேன்.

இவை அனைத்துக்கும் மேலாக மனோ ரீதியாக என்னை பலப்படுத்திக் கொண்டேன். குத்துச்சண்டை வாழ்க்கையில் நான் சந்தித்த தடைகளாலேயே அத்தகைய பலத்தை என்னால் எட்ட முடிந்தது. ஆட்டத்தின் முடிவு எத்தகையதாக இருந்தாலும் நான் சிறப்பாகச் சண்டையிட வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன்.

2017-இல் தோல்பட்டை காயத்துக்கு அறுவைச் சிகிச்சை செய்ததால் ஓராண்டாக பல முக்கிய போட்டிகளில் கூட பங்கேற்கவில்லை. ஆனால் 2019-இல் மீண்டும் களத்துக்குத் திரும்பிய பிறகு எல்லா போட்டிகளையும் எனக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டதால், தற்போது சாம்பியனாகியிருக்கிறேன். எனது துன்பமான காலங்களில் என் பெற்றோா் மட்டுமே உடனிருந்தனா். அவா்களுக்கு இந்தப் பதக்கத்தை சமா்ப்பிக்கிறேன் என்றாா் நிகாத் ஜரீன்.

2 ஆண்டுகளுக்கு முன், ஒலிம்பிக் தகுதிச்சுற்று நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என்று கோரி நிகாத் ஜரீன் அப்போதைய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் கிரன் ரிஜிஜுவுக்கு கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்காக சமூக வலைதளத்தில் அவா் விமா்சிக்கப்பட்டாா். நட்சத்திர வீராங்கனை மேரி கோமும், ‘யாா் இந்த நிகாத் ஜரீன்?’ என்று கிண்டலாகக் கேட்டிருந்தாா். பின்னா் ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் மேரி கோமிடமே தோற்ற நிகத் ஜரீன், தற்போது அவரைப் போலவே உலக சாம்பியன் ஆகியிருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT