செய்திகள்

இதுதான் சிஎஸ்கேவின் பேட்டிங் வரிசையா?: பயிற்சி முகாமில் வெளிப்பட்ட அணியின் திட்டம்

21st Mar 2022 04:11 PM

ADVERTISEMENT

 

இந்த வாரம் முதல் ஐபிஎல் 2022 போட்டி தொடங்குகிறது.

மார்ச் 26 அன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸும் கொல்கத்தா நைட்ரைடர்ஸும் மோதுகின்றன.

கடந்த வருடப் போட்டியின் இறுதிச்சுற்றில் இரு அணிகளும் மோதியதில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பையை வென்றது. 

ADVERTISEMENT

அந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியில் விளையாடிய டு பிளெஸ்சிஸ், ஷர்துல் தாக்குர், ஹேசில்வுட் ஆகிய மூவரும் வேறு அணிகளுக்குத் தேர்வாகியுள்ளார்கள். காயம் காரணமாக தீபக் சஹார் பாதி ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கேவின் பேட்டிங் வரிசை எப்படியிருக்கப் போகிறது?

சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் கிடைத்த தகவல்களைக் கொண்டு பார்க்கும்போது இதுதான் பேட்டிங் வரிசை என்று கூறப்படுகிறது. வலது, இடது கை பேட்டர்கள் கிட்டத்தட்ட சமமாக இருப்பதால் அது பேட்டிங் செய்கிறபோது அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

கான்வே
ருதுராஜ் கெயிக்வாட்
உத்தப்பா
மொயீன் அலி
ராயுடு
ஜடேஜா
தோனி

இவர்கள் ஏழு பேரும் தான் சிஎஸ்கேவின் முதல் ஏழு பேட்டர்களாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. பந்துவீச்சாளர்களாக பிராவோ/ஜார்டன், ஆடம் மில்ன், கே.எம். ஆசிஃப், ஷிவம் டுபே/ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கர் ஆகியோர் இருக்க வாய்ப்புண்டு. 

ADVERTISEMENT
ADVERTISEMENT