செய்திகள்

அறுவைச் சிகிச்சை முடிந்தது: கே.எல். ராகுல் தகவல்

30th Jun 2022 12:39 PM

ADVERTISEMENT

 

ஜெர்மனியில் தனக்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக பிரபல இந்திய வீரர் கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக கே.எல். ராகுல் விலகினார். இதனால் இங்கிலாந்துக்கு எதிராக நாளை தொடங்கும் 5-வது டெஸ்டிலும் அவரால் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஜெர்மனியில் தனக்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கே.எல். ராகுல். ஜெர்மனியின் மியூனிக்கில் இருந்து அவர் கூறியதாவது:

ADVERTISEMENT

கடந்த சில வாரங்கள் கடினமானதாக இருந்தன. ஆனால் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. காயம் குணமாகி வருகிறது. காயத்திலிருந்து மீண்டு வருவதற்கான பயணம் தொடங்கி விட்டது. அனைவருடைய பிரார்த்தனைகளுக்கு நன்றி என்று கூறியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT