செய்திகள்

இங்கிலாந்தில் பயிற்சி பெறவுள்ள மும்பை இந்தியன்ஸ் உள்ளூர் வீரர்கள்

29th Jun 2022 12:23 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் 2022, இந்திய உள்ளூர் போட்டிகள் என அனைத்தும் முடிந்து விட்டன. 

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் வருடம் முழுவதும் விளையாடுவார்கள். அடுத்த உள்ளூர் போட்டி தொடங்க எப்படியும் நான்கைந்து மாதங்கள் ஆகிவிடும். அதுவரை இதர வீரர்கள் என்ன செய்வார்கள்?

இதற்காக ஒரு புதிய திட்டம் தீட்டியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

ADVERTISEMENT

இந்திய அணியில் இடம்பெறாத மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த உள்ளூர் வீரர்களை ஜூலையில் இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்று அங்குள்ள டி20 கிளப்புகளுடன் விளையாட வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி திலக் வர்மா, குமார் கார்த்திகேயா, ரமன்தீப் சிங், ஹிருத்திக் ஷோகீன், முருகன் அஸ்வின் போன்ற மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் இங்கிலாந்துக்குச் சென்று விளையாடவுள்ளார்கள். தற்போது இங்கிலாந்தில் உள்ள அர்ஜூன் டெண்டுல்கரும் இளம் தென்னாப்பிரிக்க வீரர் பிரேவிஸும் இந்தக் குழுவில் இணைந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. அடுத்த மூன்றரை மாதங்களுக்கு உள்ளூர் ஆட்டங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் மூன்று வாரங்களுக்கு இங்கிலாந்தில் பயிற்சியெடுத்து அடுத்த ஐபிஎல் போட்டிக்கு வீரர்களைத் தயார் செய்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. மேலும் இதற்கு பிசிசிஐயின் அனுமதியும் தேவையில்லை எனக் கூறப்படுகிறது.பயிற்சி பெறும் வீரர்களைக் கண்காணிக்க தலைமைப் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனேவும் இங்கிலாந்துக்குச் செல்லவுள்ளார்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT