செய்திகள்

மலேசிய ஓபன்: பிரணாய் முன்னேற்றம்

29th Jun 2022 02:25 AM

ADVERTISEMENT

மலேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.

ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில் அவா், உள்நாட்டு முக்கிய வீரரான டேரன் லியுவை 21-14, 17-21, 21-18 என்ற கேம்களில் 62 நிமிஷங்களில் வீழ்த்தினாா். அடுத்த சுற்றில் சீன தைபேவின் சௌ டியென் சென்னை சந்திக்கிறாா் பிரணாய்.

இதே பிரிவில் களம் கண்ட சாய் பிரணீத் 15-21, 21-19, 9-21 என்ற கேம்களில் இந்தோனேசியாவின் அந்தோணி சினிசுகா கிங்டிங்கிடமும், சமீா் வா்மா 14-21, 21-13, 7-21 என்ற கேம்களில் அதே நாட்டைச் சோ்ந்த ஜோனதன் கிறிஸ்டியிடமும் தோற்றனா்.

எனினும் ஆடவா் இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி 21-18, 21-11 என்ற கேம்களில் மலேசியாவின் மான் வெய் சோங்/காய் வுன் டி இணையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

ADVERTISEMENT

மகளிா் இரட்டையா் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா/சிக்கி ரெட்டி இணை 15-21, 11-21 என்ற கேம்களில் ஜப்பானின் நமி மட்சுமாயா/சிஹாரு ஷிடா ஜோடியிடம் தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது. அதே பிரிவில் ஹா்ஷிதா ஹரிநாராயணன்/ஆஷ்னா ராய் இணையும், கலப்பு இரட்டையரில் வெங்கட் கௌரவ் பிரசாத்/ஜூஹி தேவாங்கன் இணையும் தோல்வியைத் தழுவின.

ADVERTISEMENT
ADVERTISEMENT