செய்திகள்

பவர்பிளேயின் 2 ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்தால் 3வது ஓவர் பவர்பிளே ஓவராக மாறும்: டி10 தொடரின் வித்தியாசமான விதிமுறைகள்

DIN

டி10 தொடரில் பவர்பிளேயின் 2 ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்தால் 3வது ஓவர் பவர்ப்ளே ஓவராக மாறும் என வித்தியாசமான விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது மே.இ.தீவுகள் அணி. 

உலகம் முழுக்க டி20 போட்டிகள் பிரபலாகி வரும் நிலையில் டி10 போட்டிகளும் தற்போது பிரபலம் ஆகிவருகிறது. மே.இ.அணிகள் உருவாக்கியிருக்கும் '6ஸ்டி' எனப்படும் டி10 தொடர் முற்றிலும் வித்தியாசாமானது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 24-28 வரை நடைப்பெறும்.  இதன் விதிமுறைகள்  பின்வருமாறு: 

  • 10 விக்கெட்டுகளுக்கு பதிலாக 6-6 விக்கெட்டுகள் மட்டுமே. அதாவது 5 விக்கெட்டுகள் இழந்தாலே ஒரு அணி மொத்த விக்கெட்டுகள் இழந்ததற்கு சமம். 
  • பவர்பிளே 2 ஓவர்கள் மட்டுமே. ஆனால் இந்த இரண்டு ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்தால் 3வது பவர்பிளே ஓவராக கருதப்படும். 
  • 5 ஓவர் ஒரு முனையிலும் மீதி 5 ஓவர்கள் மற்றொரு முனையில் இருந்தும் பந்து வீச வேண்டும். கிரிக்கெட்டில் பொதுவாக ஒவ்வொரு ஒவருக்கும் மாற்றி வீசுவார்கள். 
  • 45 நிமிடத்திற்குள் 10 ஓவரினை பந்து வீசி முடிக்க வேண்டும் இல்லையேல் கடைசி 6 பந்துகளுக்கு ஒரு வீரரை பீல்டிங்கிலிருந்து வெளியேற்றப்படுவர். 
  • ஃபிரீ ஹிட் பந்தை ரசிகர்களே வாக்களித்து தேர்ந்தெடுக்கலாம். வாக்கெடுப்புக்கென தனி இணையதளம், செயலிகளை வெளியிடப்படும். குறிப்பிட்ட பந்து நோ பாலாக இருந்தும் நடுவர் கொடுக்கத்தவறினால் ரசிகர்கள் வாக்களித்து அந்த பந்தை நோ பாலாக அறிவிக்கலாம். இதன் மூலம் அந்த பந்தில் விக்கெட் ஆனாலும் காப்பாற்றப்படும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT