செய்திகள்

இங்கிலாந்து டெஸ்டில் அஸ்வின்: முன்னாள் வீரர் யோசனை

28th Jun 2022 03:32 PM

ADVERTISEMENT

 

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்டில் அஸ்வினைச் சேர்க்க வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் கிராம் ஸ்வான் கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. பிர்மிங்கமில் ஜூலை 1 அன்று டெஸ்ட் தொடங்குகிறது.

இந்நிலையில் பிர்மிங்கம் டெஸ்டில் அஸ்வினைத் தேர்வு செய்யவேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் கிராம் ஸ்வான் யோசனை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது:

ADVERTISEMENT

எக்பாஸ்டன் மைதானம் என்பதால் இதற்கு முன்பு இங்கு விளையாடிய வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். அந்த மைதானத்தில் இதற்கு முன்பு விளையாடி நன்குப் பந்துவீசியுள்ளார் அஸ்வின். அந்த ஆடுகளம் அவருடைய பந்துவீச்சுக்கு உகந்ததாக இருக்கும். சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக, பெரிய அளவு பவுன்ஸ் இருக்காது. கூடுதல் உயரம் கொண்ட அஸ்வினுக்கு இந்த ஆடுகளம் பொருத்தமாக இருக்கும். 2018-ல் அற்புதமான பந்தில் குக்கை போல்ட் செய்தார் அஸ்வின். இந்தியா விளையாடும் ஒவ்வொரு டெஸ்டிலும் அஸ்வினை நான் தேர்வு செய்வேன். பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் அவர் பங்களிக்கக் கூடியவர். ஒரு பேட்டராகவே ஜடேஜா அணியில் இடம்பெற முடியும். எனவே அஸ்வினை நிச்சயம் தேர்வு செய்யவேண்டும் என்று கூறியுள்ளார். 

Tags : Ashwin Swann
ADVERTISEMENT
ADVERTISEMENT