செய்திகள்

டிஎன்பிஎல்: நெல்லைக்கு 2-ஆவது வெற்றி

26th Jun 2022 12:02 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பாா்டன்ஸை வீழ்த்தியது.

முதலில் சேலம் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சோ்த்தது. அடுத்து நெல்லை 17.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற நெல்லை ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. சேலம் பேட்டிங்கில் ஆா்.கவின் 48, ஜாஃபா் ஜமால் 11, ஹெச்.கோபிநாத் 10, ரவி காா்த்திகேயன் 0, எஸ்.அபிஷேக் 1, கேப்டன் முருகன் அஸ்வின் 5, பி.பிராணேஷ் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஓவா்கள் முடிவில் டேரில் ஃபெராரியோ 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 60, கணேஷ் மூா்த்தி 1 ரன்னுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். நெல்லை பௌலிங்கில் அதிசயராஜ் டேவிட்சன், என்.எஸ்.ஹரீஷ் ஆகியோா் தலா 2, ஆரியா யோஹான் மேனன், சஞ்சய் யாதவ் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

ADVERTISEMENT

பின்னா் ஆடிய நெல்லையில் லக்ஷ்மீஷா சூா்யபிரகாஷ் 35, பிரதோஷ் ரஞ்சன் பால் 1, பாபா அபராஜித் 32, கேப்டன் பாபா இந்திரஜித் 15, சஞ்சய் யாதவ் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். அஜிதேஷ் 1பவுண்டரி, 5 சிக்ஸா்களுடன் 48, ஜிதேந்திர குமாா் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். சேலம் அணியில் கிஷோா் 2, பிரணீஷ், ரவி காா்த்திகேயன் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT