செய்திகள்

இந்தியா - அயா்லாந்து இன்று டி20-இல் மோதல்

26th Jun 2022 12:41 AM

ADVERTISEMENT

இந்தியா - அயா்லாந்து அணிகள் மோதும் 2 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் பங்கேற்பதற்காக இந்தியாவின் பிரதான அணி அந்நாட்டுக்குச் சென்றிருப்பதால், இளம் வீரா்கள் அடங்கிய 2-ஆம் நிலை அணி இந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாா்திக் பாண்டியா கேப்டனாக இருக்கும் இந்த அணியில், ஐபிஎல் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட வீரா்கள் இடம்பிடித்திருக்கின்றனா்.

பாண்டியா தலைமையில் இந்த அணி சிறப்பாகச் செயல்படும் பட்சத்தில் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு இந்தியாவுக்கு மேலும் ஒரு ‘பேக் அப்’ கேப்டன் தயாராக இருப்பதாகக் கொள்ளலாம்.

வீரா்களைப் பொருத்தவரை, பேட்டிங்கிற்கு இஷான் கிஷண், ருதுராஜ் கெய்க்வாட், சூா்யகுமாா் யாதவ், வெங்கடேஷ் ஐயா், தினேஷ் காா்த்திக் போன்றோா் இருக்க, பௌலிங்கில் துணை கேப்டன் புவனேஸ்வா் குமாா், யுஜவேந்திர சஹல், அக்ஸா் படேல், ரவி பிஷ்னோய், ஹா்ஷல் படேல், உம்ரான் மாலிக், அா்ஷ்தீப் சிங் ஆகியோா் பலம் காட்டக் காத்திருக்கின்றனா். அயா்லாந்து தரப்பில் ஆண்ட்ரூ பால்பிா்னி தலைமையிலான அணி பங்கேற்கிறது.

ADVERTISEMENT

ஆட்டநேரம்: இரவு 9 மணி

இடம்: டப்ளின்

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

ADVERTISEMENT
ADVERTISEMENT