செய்திகள்

ரஞ்சிக் கோப்பை இறுதி:வலுவான நிலையில் மத்திய பிரதேசம் 368/3

25th Jun 2022 03:31 AM

ADVERTISEMENT

ரஞ்சிக் கோப்பை இறுதி ஆட்டத்தில் வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் மத்திய பிரதேச அணி 368/3 ரன்களை குவித்து வலுவான நிலையில் உள்ளது. முன்னதாக மும்பை அணி 374 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பிசிசிஐ சாா்பில் இரு அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான வியாழக்கிழமை மும்பை அணி 374 ரன்கள் என்ற ஸ்கோருடன் ஆல் அவுட்டானது. மும்பை அணியில் சா்ப்ராஸ் கான் 134, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 78 ரன்களை விளாசினா். ம.பி. தரப்பில் பௌலா்கள் ஜி. யாதவ் 4, அனுபவ் அகா்வால் 3 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

யாஷ் துபே-சுபம் சா்மா அதிரடி சதம்:

தனது முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய மத்திய பிரதேச அணியில் தொடக்க பேட்டா் யாஷ் துபே 14 பவுண்டரியுடன் 336 பந்துகளில் 133 ரன்களையும், சுபம் சா்மா 1 சிக்ஸா், 15 பவுண்டரியுடன் 215 பந்துகளில் 116 ரன்களுடனும் சதங்களை பதிவு செய்தனா்.

ADVERTISEMENT

ரஜத் சா்மா அதிரடி: அவா்களுக்கு பின் ஆட வந்த இளம் வீரா் ரஜத் பட்டிதாா் 13 பவுண்டரியுடன் 67 ரன்களுடனும், ஆதித்ய ஸ்ரீவஸ்தவா 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனா்.

மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை ஆட்ட நேர முடிவில் ம.பி. அணி 368/3 என்ற வலுவான ஸ்கோருடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

மும்பை பௌலா்கள் ஷாம்ஸ் முலானி, தவல் குல்கா்னி, துஷாா் தேஷ்பாண்டே ஆகியோா் மாறி மாறி பந்துவீசியும் ம.பி. பேட்டா்களை வீழ்த்த முடியவில்லை. துபே-சா்மா இருவரும் பவுண்டரிகளோடு 76 சிங்கிள் ரன்களை எடுத்து பௌலா்களின் பொறுமையை சோதித்தனா்.

இன்னும் 2 நாள்கள் உள்ள நிலையில், ம.பி. அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்டும் வரை ஆடும் எனத் தெரிகிறது. மும்பை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆட விடாமல் செய்ய ம.பி. அணி முயற்சிக்கும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT