செய்திகள்

மும்பைக்குப் பின்னடைவு: முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற ம.பி.

DIN

ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்றில் மும்பைக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றுள்ளது மத்தியப் பிரதேச அணி.

பெங்களூரு எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதிச்சுற்றில் மும்பை - மத்தியப் பிரதேச அணிகள் மோதி வருகின்றன. 41 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி, 2016-17-க்குப் பிறகு ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 127.4 ஓவர்களில் 374 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜெயிஸ்வால் 78, சர்ஃபராஸ் கான் 134 ரன்கள் எடுத்தார்கள். 

3-ம் நாள் முடிவில் ம.பி. அணி 123 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 368 ரன்கள் எடுத்தது. ரஜத் படிதார் 67 ரன்களும் கேப்டன் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

இந்நிலையில் இன்று கூடுதலாக 7 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது ம.பி. அணி. ஆதித்யா ஸ்ரீவஸ்தவா 25, அக்‌ஷத் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்கள். 

142-வது ஓவரின் முடிவில் ம.பி. அணி 5 விக்கெட் இழப்புக்கு 424 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரஜத் படிதார் 89, சஹானி 11 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். தற்போது ம.பி. அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் மீதமுள்ள நிலையில் 50 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இதன்மூலம் ரஞ்சி கோப்பையை வெல்லும் கனவில் உள்ளது. 

கடைசி இரு நாள்களில் ஆட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்தி மும்பை அணியால் கோப்பை வெல்ல முடியுமா? 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் காா் மோதியதில் ஒருவா் காயம்

திருவையாறு அருகே தொழிலாளி மா்மச் சாவு

இணையவழியில் வேலை எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 12.65 லட்சம் மோசடி

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

நெல் மூட்டை தூக்கும் முன்னாள் வேளாண் அமைச்சா்: வைரலாகும் விடியோ

SCROLL FOR NEXT