செய்திகள்

தென்னாப்பிரிக்க டி20 தொடரிலிருந்து ராகுல் விலகல்: பந்த் கேப்டன்

8th Jun 2022 06:43 PM

ADVERTISEMENT

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இது குறித்து பிசிசிஐ தெரிவித்திருப்பதாவது, “ தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரிலிருந்து காயம் காரணமாக கே.எல்.ராகுல் முற்றிலுமாக விலகுகிறார். அவருக்குப் பதிலாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் கேப்டனாக செயல்படுவார். ஹார்திக் பாண்டியா துணைக் கேப்டனாக செயல்படுவார். சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் காயம் காரணமாக இந்தத் தொடரிலிருந்து விலகுகிறார்.” எனத் தெரிவித்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை (ஜூன் 9) முதல் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT