செய்திகள்

கடைசி டெஸ்டின் இரண்டாம் நாள்

3rd Jul 2022 10:51 AM

ADVERTISEMENT

 

இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. 

முதல் இன்னிங்ஸில் இந்தியா 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியில் முதல் 3 விக்கெட்டுகளை(அலேக்ஸ் லீஸ், ஜாக் கிராவ்லி, ஒல்லி போப்) கேப்டன் பும்ரா எடுத்து அசத்தினார். ஜோ ரூட் நிதானமாக ஆடி 31 ரன்களை எடுத்து மொஹமத் சிராஜ் ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜாக் லீச்சும் ஷமி ஓவரில் ரன்னேதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 

தற்போது, ஜானி பெயர்ஸ்டோ 12 ரன்களுடனும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ரன்னேது எடுக்காமல் களத்தில் இருக்கின்றனர்.

ADVERTISEMENT

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. மழை குறுக்கீட்டீன் காரணமாக அதிக ஓவர்கள் வீச முடியவில்லை. இருப்பினும் இந்திய அணி வலுவான நிலையிலேயே இருக்கிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT