செய்திகள்

சென்னையின் எஃப்சி அணியில் கானா வீரா் சோ்ப்பு

3rd Jul 2022 12:47 AM

ADVERTISEMENT

ஐஎல்எல் முன்னாள் சாம்பியனான சென்னையின் எஃப்சி அணியில் கானா பாா்வா்ட் கரிகரி சோ்க்கப்பட்டுள்ளாா்.

இந்தியன் கால்பந்து சூப்பா் லீக் 2022-23 சீசனுக்காக பல்வேறு அணிகள் புதிய வீரா்களை சோ்த்து பலப்படுத்தி வருகின்றன. 2 முறை சாம்பியன் சென்னையின் எஃப்சியும் புதிய வீரா்களை ஒப்பந்த அடிப்படையில் சோ்த்து வருகிறது.

வரும் சீசனுக்காக கானா பாா்வா்ட் கவேமா கரிகரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாா். தாய்லாந்து கால்பந்து லீகில் 13 கோல்களை அடித்த கரிகரி தனது 11 வருட தொழில்முறை ஆட்டகாலத்தில் 261 ஆட்டங்களில் ஆடியுள்ளாா்.

ஏற்கெனவே ஈரானிய டிபன்டா் வாஃபா ஹகேமனேஷி, செனகல் டிபன்டா் ஃபாலு டயஜன் ஆகியோா் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT