செய்திகள்

இந்தியா-இங்கிலாந்து தொடர்: இங்கிலாந்து அணி வீரர்கள் பட்டியல் அறிவிப்பு

DIN

இந்தியாவிற்கு எதிராக விளையாட உள்ள இங்கிலாந்து அணி வீரர்களின் பெயர்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூலை 1) அறிவித்துள்ளது.

இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான டி20 போட்டிகள் வருகிற ஜூலை 7 முதலும், ஒரு நாள் போட்டிகள் ஜூலை 12 முதலும் தொடங்க உள்ளன. 

இந்தியாவிற்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடர் ஆகிய இரண்டிலுமே இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லர் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியா-இங்கிலாந்து அணிகள் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் 5வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவிற்கு எதிராக விளையாட உள்ள இங்கிலாந்து அணி வீரர்களின் பெயர் பட்டியலை அந்த நாடு அறிவித்துள்ளது.

இங்கிலாந்து டி20 அணி:  ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, ஹாரி ப்ரூக், சாம் கரன், ரிச்சர்டு கிளீசன், கிறிஸ் ஜோர்டான், லயம் லிவிங்ஸ்டன், டேவிட் மலன், தைமல் மில்ஸ், மேத்யூ பர்கின்சன், ஜேசன் ராய், பில் சால்ட், ரீஸ் டாப்ளே, டேவிட் வில்லி.

இங்கிலாந்து ஒரு நாள் அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, ஜோனாதன் பேர்ஸ்டோ, ஹாரி ப்ரூக், பிரிடான் கார்ஸ், சாம் கரன்,லயம் லிவிங்ஸ்டன், கிரெய்க் ஓவர்டன்,மேத்யூ பர்கின்சன், ஜோ ரூட்,ஜேசன் ராய், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்ளே, டேவிட் வில்லி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT