செய்திகள்

ஐபிஎல் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து வீரர்களுக்குப் புதிய சிக்கல்!

DIN

ஐபிஎல் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து வீரர்கள், போட்டியின் கடைசிப் பகுதியில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.

ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறவுள்ளது. 2018-க்குப் பிறகு நடைபெறும் மெகா ஏலம் என்பதால் இந்த வருட ஏலம் இரு நாள்களுக்கு நடைபெறவுள்ளது.  ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வருடம் முதல் லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. மார்ச் 27 அன்று ஐபிஎல் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து டெஸ்ட் வீரர்கள், போட்டியின் கடைசிக்கட்டத்தில் விளையாட சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

நியூசிலாந்து அணி ஜூன் மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் ஜூன் 2 அன்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

ஐபிஎல் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து வீரர்கள், ஐபிஎல் முழுக்க விளையாடினால் அவர்களால் லார்ட்ஸ் டெஸ்டில் பங்கேற்பது சிரமம் என அறியப்படுகிறது. ஜோ ரூட், ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை எனச் சொல்லிவிட்டார்கள். ஜாஸ் பட்லரை ராஜஸ்தான் அணி தக்கவைத்துள்ளது. மார்க் வுட், ஜானி பேர்ஸ்டோ உள்ளிட்ட 22 இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளார்கள். மார்க் வுட், ஜானி பேர்ஸ்டோ தவிர டேவிட் மலான், போப், கிரைக் ஓவர்டன், சாம் பில்லிங்ஸ், லாரன்ஸ் போன்ற வீரர்கள் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பெறக் கூடியவர்கள் என்பதால் நிலைமை சிக்கலாகியுள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் அணி வீரர்கள், நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு ஒரு முதல்தர ஆட்டத்திலாவது விளையாட வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து வீரர்களால் எப்படி ஐபிஎல் முடியும் வரை விளையாட முடியும்?

இக்காரணங்களில் மே கடைசியில் முடியும் ஐபிஎல் போட்டியில் மே 15 அல்லது மே 20-க்குப் பிறகு  இங்கிலாந்து வீரர்களால் விளையாட முடியுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் இங்கிலாந்து டெஸ்ட் வீரர்களைத் தேர்வு செய்யும் ஐபிஎல் அணிகள் இந்த விஷயத்தைக் கருத்தில் கொண்டு ஏலத்தில் முடிவெடுக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகியுள்ளன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT