செய்திகள்

இந்திய அணியில் ரவி பிஷ்னாய்: குல்தீப்புக்கும் வாய்ப்பு எனத் தகவல்

26th Jan 2022 09:53 PM

ADVERTISEMENT


மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடருக்கான இந்திய அணியில் இளம் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுபற்றி பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

"மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். புதிய முகமாக ரவி பிஷ்னாய் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியை ரோஹித் சர்மா வழிநடத்துகிறார்."

இதையும் படிக்கஉத்தரப் பிரதேச தேர்தல்: காங்கிரஸ் 3-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

ADVERTISEMENT

புவனேஷ்வர் குமார் ஒருநாள் தொடரில் தக்கவைக்கப்பட்டு, டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால், விராட் கோலி இரண்டு அணிகளிலும் இடம்பெற்றுள்ளார் என்ற தகவலும் வந்துள்ளது.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் ஆட்டம் பிப்ரவரி 6-ம் தேதி தொடங்குகிறது.

Tags : Ravi Bishnoi
ADVERTISEMENT
ADVERTISEMENT