செய்திகள்

ஐசிசி டி20 சிறந்த கிரிக்கெட் வீரா் ரிஸ்வான், வீராங்கனை டேமி பிமௌன்ட்

DIN

ஐசிசி டி20 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரா் விருதுக்கு பாகிஸ்தான் விக்கெட் கீப்பா் முகமது ரிஸ்வான் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். சிறந்த வீராங்கனை விருது டேமி பிமௌன்ட்டுக்கு கிடைத்துள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டில் மிகச்சிறப்பாக ஆடியமைக்காக முகமது ரிஸ்வானுக்கு இப்பெருமை கிடைத்துள்ளது. வெறும் 29 ஆட்டங்களில் 1,326 ரன்களை விளாசினாா் ரிஸ்வான். அவரது ஸ்ட்ரைக் ரேட் 134.89 ஆகும்.

மேலும் டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் விக்கெட் கீப்பராக செயல்பட்டு, மூன்றாவது அதிக ரன்களை குவித்த வீரா் என்ற சிறப்பையும் அவா் பெற்றாா்.

மேலும் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 55 பந்துகளில் 79 ரன்களை விளாசி, உலகக் கோப்பையில் முதல் வெற்றி பெற வித்திட்டாா் ரிஸ்வான்.

டேமி பிமௌன்ட்:

மகளிா் பிரிவில் இங்கிலாந்து வீராங்கனை டேமி பிமௌன்ட் சிறந்த வீராங்கனையாக தோ்வு செய்யப்பட்டாா். 9 ஆட்டங்களில் சராசரி 33.66 -உடன் 3 அரைசதங்கள் உள்பட 303 ரன்களை விளாசினாா் பிமௌன்ட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT