செய்திகள்

அதனால்தான் எனக்குச் சந்தேகமாக உள்ளது: ரோஹித் சர்மாவை கேப்டனாகத் தேர்வு செய்வது பற்றி கவாஸ்கர்

DIN

ரோஹித் சர்மாவை டெஸ்ட் கேப்டனாக நியமிப்பது குறித்து தனது கருத்தை முன்னாள் வீரர் கவாஸ்கர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்று அசத்தியுள்ளது தென்னாப்பிரிக்க அணி. இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 19 அன்று தொடங்குகிறது. இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக கே.எல். ராகுலும் துணை கேப்டனாக பும்ராவும் செயல்படவுள்ளார்கள்.

இந்திய ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாகவும் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாகவும் உள்ள ரோஹித் சர்மா, விராட் கோலியின் விலகலுக்குப் பிறகு டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் தேர்வாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 

இந்நிலையில் ரோஹித் சர்மாவை டெஸ்ட் கேப்டனாக நியமிப்பது குறித்து முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியதாவது:

உடற்தகுதிச் சிக்கல் ரோஹித் சர்மாவிடம் உள்ளது. நல்ல உடற்தகுதியுடன் எல்லா ஆட்டங்களிலும் விளையாடக் கூடிய வீரர் தான் இந்திய அணிக்குத் தேவை. ஆனால் ரோஹித் சர்மாவுக்கு அடிக்கடித் தசைநார் காயங்கள் ஏற்படுகின்றன. அதனால் எனக்குச் சந்தேகம் உள்ளது. எல்லா வகையான போட்டிகளிலும் விளையாடக் கூடிய வீரர் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT