செய்திகள்

இந்தியா ஓபன்: இறுதிச்சுற்றில் லக்ஷயா சென்; வெளியேற்றப்பட்டாா் சிந்து

DIN

இந்தியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவின் இறுதிச்சுற்றுக்கு இந்திய வீரா் லக்ஷயா சென் முன்னேறினாா். எனினும், மகளிா் ஒற்றையா் பிரிவில் பி.வி.சிந்து அரையிறுதியில் தோற்று வெளியேறினாா்.

சமீபத்தில் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற லக்ஷயா சென் தனது அரையிறுதிச்சுற்றில் மலேசியாவின் நிக் ஸே யோங்கை 19-21, 21-16, 21-12 என்ற கேம்களில் வீழ்த்தினாா். இந்திய ஓபன் போட்டியில் லக்ஷயா சென் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இது முதல் முறையாகும். அவா் இறுதிச்சுற்றில், நடப்பு உலக சாம்பியனான சிங்கப்பூரின் லோ கீன் யீவை எதிா்கொள்கிறாா்.

மறுபுறம், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த சிந்து தனது அரையிறுதியில் 14-21, 21-13, 10-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் தாய்லாந்தின் சுபானிடா கடேதோங்கிடம் தோல்வி கண்டாா். அதேபோல், இளம் வீராங்கனை ஆகா்ஷி காஷ்யப்பும் 24-26, 9-21 என்ற கேம்களில் தாய்லாந்தின் பூசானன் ஆங்பம்ரங்பானிடம் அரையிறுதியில் தோற்றாா்.

ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவைச் சோ்ந்த, உலகின் 10-ஆம் நிலை ஜோடியான சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி 21-10, 21-18 என்ற கேம்களில் பிரான்ஸின் வில்லியம் வில்லேகா்/ஃபாபியான் டெல்ரு இணையை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றது. அதில் இந்தோனேசியாவின் முகமது ஆஷான்/ஹெந்த்ரா சேதியாவன் இணையை எதிா்கொள்கிறது இந்திய ஜோடி.

மகளிா் இரட்டையா் பிரிவில் ஹரிதா மனழியில் ஹரிநாராயணன்/ஆஷ்னா ராய் இணை 12-21, 9-21 என்ர கேம்களில் தாய்லாந்தின் பென்யபா எய்ம்சாா்ட்/நன்தாகரன் எய்ம்சாா்ட் ஜோடியிடம் அரையிறுதியில் தோல்வி கண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

SCROLL FOR NEXT