செய்திகள்

ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணி: முதல் ஒருநாள் ஹைலைட்ஸ் விடியோ

5th Dec 2022 01:57 PM

ADVERTISEMENT

 

வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.

வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் இந்திய அணி விளையாடுகிறது. ஒருநாள் தொடர் ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. கே.எல். ராகுலைத் தவிர இதர பேட்டர்கள் சரியாக விளையாடாததால் இந்திய அணி 41.2 ஓவர்களில் 186 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கே.எல். ராகுல் 73 ரன்கள் எடுத்தார். ஷகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளையும் எபடாட் ஹுசைன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

வங்கதேச அணி 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் நின்றபோது கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மெஹிதி ஹசன் மிராஸும் முஸ்தாஃபிசுர் ரஹ்மானும் 51 ரன்கள் சேர்த்து பரபரப்பான முறையில் தங்கள் அணியை வெற்றி பெற வைத்தார்கள். வங்கதேச அணி, 46 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் லிட்டன் தாஸ் 41 ரன்கள் எடுத்தார். 

ADVERTISEMENT

இந்த ஆட்டத்தின் ஹைலைட்ஸ் விடியோ:

 

ADVERTISEMENT
ADVERTISEMENT