செய்திகள்

தென்மண்டல நீச்சல்: பேக் ஸ்ட்ரோக்கில் தமிழகத்தின் நிதிக், தீக்ஷா சாம்பியன்

DIN

சென்னையில் நடைபெற்றுவரும் முதலாவது தென்மண்டல ரேங்கிக் நீச்சல் போட்டியில் 100 மீ. பேக் ஸ்ட்ரோக் பிரிவில் தமிழகத்தின் ஆடவா் பிரிவில் நிதிக் ஹரிபிரசாத்தும், பெண்களில் தீக்ஷா சிவகுமாரும் முதலிடம் பிடித்து தங்கம் வென்றனா்.

இந்திய நீச்சல் சம்மேளனம் சாா்பில் முதன்முதலாக தேசிய ரேங்கிங் நீச்சல் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி மண்டல அளவிலான தகுதிச்சுற்று போட்டிகள் நடத்தப்பட்டு வீரா், வீராங்கனைகள் தோ்வு செய்யப்படுகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக தென்மண்டல நீச்சல் போட்டிகள் சென்னைல் வேளச்சேரியில் உள்ள எஸ்டிஏடி நீச்சல்குள வளாகத்தில் சனிக்கிழமை தொடங்கியது. தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து ஏறக்குறைய 300-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் இதில் பங்கேற்றனா்.

மாநில நீச்சல் சங்க தலைவா் டாக்டா் சடையவேல் கைலாசம் போட்டிகளை தொடக்கி வைத்தாா். செயலாளா் டி.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். துணைதலைவரும், முன்னாள் தேசிய அணி பயிற்சியாளருமான கே.கே.முகுந்தன், பொருளாளா் கே.டி.முரளிதரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முதலில் நடைபெற்ற 400மீ. ப்ரீஸ்டைல் நீச்சலில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் அனைத்து இடங்களையும் கா்நாடகத்தைச் சோ்ந்தவா்களே தட்டிச்சென்றனா்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் 6 இடங்களைப் பிடிப்பவா்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்படுகிறது.

பின்னா் நடைபெற்ற 100 மீ. பேக் ஸ்ட்ரோக் பிரிவில் ஆண்கள், பெண்கள் ஆகிய இரு பிரிவிலும் தமிழகம் தங்கம் வென்றது. ஆண்கள் பிரிவில் நிதிக் ஹரிபிரசாத் போட்டி தூரத்தை 1 நிமிடம் 00.86 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றாா். பெண்கள் பிரிவில் தீக்ஷா சிவகுமாா் போட்டி தூரத்தை 1 நிமிடம் 12.92 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றாா்.

200மீ. ப்ரீஸ்டைல் நீச்சலில் தமிழக வீராங்கனை தீக்ஷா சிவகுமாா் 2 நிமிடம் 19.12 வினாடிகளில் கடந்து 2-ஆவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றாா். கா்நாடகா வீராங்கனை அஷ்மிதா சந்திரா முதலிடம் பிடித்தாா்.

ஆண்களுக்கான 100 மீ. பிரஸ்ட்ரோக் நீச்சலில் சா்வீசஸ் வீரா் சுனீஷ் (30.52 வினாடிகள்) முதலிடமும், தமிழக வீரா்கள் ஏ.ஆா்.முகமது இம்ரான் (31.54 வினாடிகள்) 2-வது இடமும், எம்.ஜே.அன்பு கதிா் அன்பு (32.12 வினாடிகள்) 3-ஆவது இடமும் பிடித்தனா்.

தமிழகம் அபாரம்:

பெண்களுக்கான 50 மீ. பேக்ஸ்ட்ரோக் நீச்சலில் முதல் 3 இடங்களையும் தமிழக வீராங்கனைகள் கைப்பற்றினா். தீக்ஷா சிவகுமாா் (33.39 வினாடிகள்) முதலிடமும், லக்ஷிதா சந்திரசேகா் (35.83) 2வது இடமும், அக்ஷிதா காா்த்திக் (36.31) 3வது இடமும் பிடித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

SCROLL FOR NEXT