செய்திகள்

முதல் ஒருநாள்: இந்தியா 186க்கு சுருண்டது! 

4th Dec 2022 02:54 PM

ADVERTISEMENT

இந்திய அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. மிர்பூரில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் லிடன் தாஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்தியா முதலில் பேட்டிங் செய்து 41.2 ஓவர்களில் 186க்கு மொத்த விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 70 பந்துகளில் 73 ரன்களை எடுத்தார். இதி 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கும். ரோஹித் 27ரன்கள், கோலி 9 ரன்கள். தவான் 7 ரன்கள், ஸ்ரேயஷ் ஐயர் 24 ரன்கள் என மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

வங்க தேச வீரர் ஷகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளும், ஹொசைன் 4 விக்கெட்டுகளிம் எடுத்து அசத்தினர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT