செய்திகள்

உலகக் கோப்பை: ஏமாற்றத்துடன் வெளியேறிய அணிகள்!

DIN

2022 கால்பந்து உலகக் கோப்பையில் ஜெர்மனி, பெல்ஜியம், உருகுவே, டென்மார்க் உள்ளிட்ட அணிகள் மூன்றே ஆட்டங்களுடன் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளன.

நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் போர்ச்சுகலை தென் கொரியா 2-1 எனவும் கானாவை உருகுவே 2-0 எனவும் ஸ்விட்சர்லாந்து செர்பியாவை 3-2 எனவும் கேமரூன் பிரேஸிலை 1-0 எனவும் வீழ்த்தின. இதையடுத்து நேற்றைய ஆட்டங்களின் முடிவில் ஸ்விட்சர்லாந்தும் தென் கொரியாவும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. கூடுதலாக ஒரு கோல் அடித்திருந்தால் உருகுவே தகுதி பெற்றிருக்கும். இதனால் வெற்றி பெற்றும் அந்த அணியால் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. 

பிரேஸிலும் போர்ச்சுகலும் தங்களுடைய பிரிவில் முதலிடத்தைப் பிடித்தாலும் கடைசி ஆட்டத்தில் தோற்றுள்ளன. பிரேஸிலைத் தோற்கடித்தாலும் கேமரூன் அணியால் அடுத்தச் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. 

இந்நிலையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட வேண்டிய 16 அணிகளும் முடிவு செய்யப்பட்டுள்ளன. 

பிரான்ஸ், நெதர்லாந்து, இங்கிலாந்து, போலந்து, ஸ்பெயின், குரோசியா, போர்ச்சுகல், ஸ்விட்சர்லாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா, மொராக்கோ, செனகல், அர்ஜென்டீனா, பிரேஸில், அமெரிக்கா.

ஜெர்மனி, பெல்ஜியம், உருகுவே, டென்மார்க் உள்ளிட்ட பல அணிகள் அடுத்தச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியுள்ளன. 

உலகக் கோப்பை: வெளியேறிய அணிகள்

ஐரோப்பா (5): ஜெர்மனி, பெல்ஜியம், டென்மார்க், செர்பியா, வேல்ஸ்
ஆசியா (3): கத்தார், ஈரான், சவூதி அரேபியா
ஆப்பிரிக்கா (3): துனிசியா, கேமரூன், கானா
வடக்கு & மத்திய அமெரிக்கா (3): கோஸ்டா ரிக்கா, கனடா, மெக்ஸிகோ
தென் அமெரிக்கா (2): ஈகுவடார், உருகுவே

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

தியாகராஜ சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

பாஜக, காங்கிரஸ் பணப் பட்டுவாடா: புதுவை தொகுதியில் தோ்தலை ரத்து செய்ய அதிமுக வலியுறுத்தல்

ஸ்ரீராமநவமி வாா்ஷிக மஹோற்சவம்

நாகை மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT