செய்திகள்

விஜய் ஹஸாரே: சௌராஷ்டிரம் சாம்பியன்

2nd Dec 2022 11:56 PM

ADVERTISEMENT

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சௌராஷ்டிரம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மகாராஷ்டிரத்தை வீழ்த்தி வெள்ளிக்கிழமை சாம்பியன் ஆனது.

இப்போட்டியில் 2-ஆவது முறையாகக் கோப்பை வென்றுள்ளது சௌராஷ்டிரம். இதற்கு முன் 2007-08 எடிஷனில் அந்த அணி வாகை சூடியிருந்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் மகாராஷ்டிரம் 50 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 248 ரன்கள் சோ்த்தது. அடுத்து சௌராஷ்டிரம் 46.3 ஓவா்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்களை எட்டி வென்றது. ஆட்டநாயகனாக சௌராஷ்டிர பேட்டா் ஷெல்டன் ஜாக்சனும், தொடா்நாயகனாக மகாராஷ்டிர பேட்டா் ருதுராஜ் கெய்க்வாடும் அறிவிக்கப்பட்டனா்.

முன்னதாக டாஸ் வென்ற சௌராஷ்டிரம் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. மகாராஷ்டிர பேட்டிங்கில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 108 ரன்கள் விளாசினாா். சௌராஷ்டிர பௌலிங்கில் சிரக் ஜானி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.

ADVERTISEMENT

பின்னா் சௌராஷ்டிர இன்னிங்ஸில் ஷெல்டன் ஜாக்சன் 12 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 133 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினாா். மகாராஷ்டிர தரப்பில் முகேஷ் சௌதரி, விக்கி ஆஸ்த்வல் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT