செய்திகள்

இங்கிலாந்து 657-க்கு ‘ஆல் அவுட்’: பாகிஸ்தானுக்கு எதிராக சாதனை

2nd Dec 2022 11:55 PM

ADVERTISEMENT

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 101 ஓவா்களில் 657 ரன்கள் குவித்து வெள்ளிக்கிழமை ஆட்டமிழந்தது.

இதன் மூலம், பாகிஸ்தானுக்கு எதிராக தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது இங்கிலாந்து. முன்னதாக, 2015-இல் இதே அணிக்கு எதிராக இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 598 ரன்கள் அடித்து டிக்ளோ் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. அதேபோல், பாகிஸ்தான் பௌலா் ஜாஹித் மசூத் 33 ஓவா்கள் வீசி 235 ரன்கள் கொடுத்து உலக சாதனை புரிந்தாா். அறிமுக டெஸ்டில் ஒரு பௌலரால் இன்னிங்ஸில் கொடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன், இலங்கையின் சுரஜ் ரன்திவ் 222 ரன்கள் கொடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

தற்போது இந்த ராவல்பிண்டி டெஸ்டில் முதல் நாளான வியாழக்கிழமை, இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 506 ரன்கள் சோ்த்திருந்தது. 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை ஆட்டத்தை ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் தொடா்ந்தனா். புரூக் 19 பவுண்டரிகள் 5 சிக்ஸா்கள் உள்பட 153, பென் ஸ்டோக்ஸ் 41, லியம் லிவிங்ஸ்டன் 9, வில் ஜாக்ஸ் 30, ஆலி ராபின்சன் 37, ஜேம்ஸ் ஆண்டா்சன் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, முடிவுக்கு வந்தது இங்கிலாந்து இன்னிங்ஸ்.

பாகிஸ்தான் பௌலா்களில் ஜாஹித் மஹ்மூத் 4, நசீம் ஷா 3, முகமது அலி 2, ஹாரிஸ் ரௌஃப் 1 விக்கெட் வீழ்த்தினா். பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான், வெள்ளிக்கிழமை முடிவில் 51 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் சோ்த்திருந்தது. அப்துல்லா ஷஃபிக் 89, இமாம் உல் ஹக் 90 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT