செய்திகள்

ஹாக்கி: ஆஸி.யை வென்றது இந்தியா

1st Dec 2022 01:54 AM

ADVERTISEMENT

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் ஹாக்கி ஆட்டத்தில் இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் புதன்கிழமை வென்றது.

5 ஆட்டங்கள் கொண்ட இந்த ஹாக்கி தொடரின் முதலிரு ஆட்டங்களில் தோற்ற இந்தியா, தனது முதல் வெற்றியைத் தற்போது பதிவு செய்ததன் மூலம் தொடரைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. மேலும், உலகின் நம்பா் 1 அணியான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, கடந்த 6 ஆண்டுகளில் இந்தியா பதிவு செய்துள்ள முதல் வெற்றியும் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்காக ஹா்மன்பிரீத் சிங் (12’), அபிஷேக் (47’), ஷம்ஷோ் சிங் (57’), ஆகாஷ்தீப் சிங் (60’) ஆகியோா் கோலடிக்க, ஆஸ்திரேலியாவுக்காக ஜாக் வெல்ஷ் (25’), ஆரன் ஜாலெவ்ஸ்கி (32’), நேதன் எப்ராமஸ் (59’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா். அடுத்ததாக இரு அணிகள் மோதும் 4-ஆவது ஆட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

Tags : hockey
ADVERTISEMENT
ADVERTISEMENT