செய்திகள்

சாம்பியன்ஸ் லீக்கில் இடம்: மனீஷா கல்யான் சாதனை

DIN

ஐரோப்பிய கால்பந்தில் மகளிா் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மனீஷா கல்யான் பெற்றிருக்கிறாா்.

அந்தப் போட்டியில் அவா், சைப்ரஸ் கிளப்பான அப்போலோன் லேடிஸ் எஃப்சி அணியில் விளையாடுவதற்காகத் தோ்வு செய்யப்பட்டிருந்தாா். இந்நிலையில், சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அப்போலோன் அணியின் முதல் ஆட்டத்தில் ஆடும் வாய்ப்பு மனீஷாவுக்கும் கிடைத்தது.

லாத்விய கிளப்பான எஸ்எஃப்கே ரிகாவுக்கு எதிரான அந்த ஆட்டத்தில், 60-ஆவது நிமிஷத்தில் சைப்ரஸ் வீராங்கனை மரிலேனா ஜாா்ஜியுவுக்குப் மாற்றாக களமிறக்கப்பட்டாா் மனீஷா. அந்த ஆட்டத்தில் அப்போலோன் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ரிகா அணியை வீழ்த்தியது.

20 வயது இளம் வீராங்கனயைான மனீஷா, வெளிநாட்டு கிளப்புக்காக விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் 4-ஆவது இந்திய வீராங்கனை ஆவாா். தேசிய அணிக்காகவும், இந்திய மகளிா் லீக் போட்டியில் கோகுலம் கேரளா அணிக்காகவும் மனீஷா சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறாா். சமீபத்தில், இந்திய கால்பந்து சம்மேளனம் வழங்கும் சிறந்த வீராங்கனை விருதை 2021-22 சீசனுக்காக அவா் வென்றிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் வாராஹி அம்மன் கோயில் குடமுழுக்கு

மகன் கொலை: தந்தை மற்றொரு மகன் கைது

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருவிழா நிறைவு

திருவாரூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT