செய்திகள்

நிபுணர்கள் பாராட்டு: பிரபல செஸ் வீரரை வீழ்த்தி பிரக்ஞானந்தா முன்னிலை

DIN

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அடுத்ததாக அமெரிக்காவின் மியாமியில் நடைபெறும் (ரேபிட் முறையிலான) எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கோப்பைப் போட்டியில் விளையாடி வருகிறார் இந்தியாவின் பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தா.

முதல் சுற்றில் உலகின் நெ.1 ஜூனியர் வீரர் அலிரேஸா ஃபிரோஜாவை 2.5-1.5 என வீழ்த்தினார் பிரக்ஞானந்தா 2-வது சுற்றில் பிரபல வீரர் அனிஷ் கிரியை 2.5-1.5 என வீழ்த்தினார். 3-வது சுற்றில் முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்தபோதும் மீண்டு வந்து 2.5-1.5 என ஹான்ஸ் நீமன்னை வீழ்த்தினார். இதனால் அவர் தொடர்ந்து கார்ல்சனுடன் இணைந்து முன்னிலையில் உள்ளார்.

இந்நிலையில் 4-வது சுற்றில் பிரபல வீரர் லெவோன் ஆரோனியனை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா. முதல் இரு ஆட்டங்களும் டிரா ஆகின. எனினும் அடுத்த இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 3-1 என ஆரோனியனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. 3-வது ஆட்டத்தில் 11-வது நகர்த்தலிலேயே ஆட்டத்தைத் தன் வசம் கொண்டு வந்து ஆட்டத்தை பிரக்ஞானந்தா வென்றது செஸ் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இதுபோல ஆரோனியனை நொறுக்கிய ஓர் ஆட்டத்தை நான் பார்த்ததே இல்லை என கிராண்ட்மாஸ்டர் பீட்டர் லேகோ பிரக்ஞானந்தாவைப் புகழ்ந்துள்ளார். 

4 சுற்றுகளின் முடிவில் பிரக்ஞானந்தா, கார்ல்சனுடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார். 5-வது சுற்றில் லியம் லீயை எதிர்கொள்கிறார் பிரக்ஞானந்தா. ஆகஸ்ட் 21 அன்று 7-வது மற்றும் இறுதிச்சுற்றில் கார்ல்சனுடன் மோதுகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT