செய்திகள்

இந்தியச் சுற்றுப்பயணம்: நியூசிலாந்து ஏ அணி அறிவிப்பு

19th Aug 2022 03:02 PM

ADVERTISEMENT

 

நியூசிலாந்து அணி ஏ அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 நான்கு நாள் ஆட்டங்களிலும் 3 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாடவுள்ளது.

2018-க்குப் பிறகு முதல்முறையாக நியூசிலாந்து ஏ அணி வெளிநாட்டில் விளையாடவுள்ளது. நியூசிலாந்து ஏ அணி கடைசியாக 2017-ல் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்தது. 

இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகள் விளையாடும் ஆட்டங்கள் சென்னை, பெங்களூரில் நடைபெறவுள்ளன. இத்தொடரில் விளையாடவுள்ள நியூசிலாந்து ஏ அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு நாள் ஆட்டங்களுக்கு ராபி ஓ டொனெல்லும் லிஸ்ட் ஏ ஆட்டங்களுக்கு டாம் புரூஸும் தலைமை தாங்குகிறார்கள். 

ADVERTISEMENT

நியூசிலாந்து ஏ அணி:

ராபி ஓ டொனெல் (கேப்டன்), டாம் புரூஸ் (கேப்டன்), சாட் பெளஸ், ஜோ கார்டர், மார்க் சாப்மன், டேன் கிளவர் (விக்கெட் கீப்பர்), ஜகோப் டஃபி, மேட் ஃபிஷர், கேம்ரூன் பிளெட்சர் (விக்கெட் கீப்பர்), பென் லிஸ்டர், ரச்சின் ரவிந்திரா, மைகேல் ரிப்பன், சீன் சோலியா, லோகன் வான் பீக், ஜோ வாக்கர்.

இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகளின் ஆட்டங்கள்

முதல் 4 நாள் ஆட்டம்: செப்டம்பர் 1 - 4  (பெங்களூர்)
2-வது 4 நாள் ஆட்டம்: செப்டம்பர் 8 - 11 (பெங்களூர்)
3-வது 4 நாள் ஆட்டம்: செப்டம்பர் 15 - 18 (பெங்களூர்)

முதல் லிஸ்ட் ஏ ஆட்டம்: செப்டம்பர் 22 (சென்னை)
2-வது லிஸ்ட் ஏ ஆட்டம்: செப்டம்பர் 25 (சென்னை)
3-வது லிஸ்ட் ஏ ஆட்டம்: செப்டம்பர் 27 (சென்னை)

ADVERTISEMENT
ADVERTISEMENT