செய்திகள்

லாா்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்து - 165

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

புதன்கிழமை முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வியாழக்கிழமை ஸ்டூவா்ட் பிராட் 15, ஜேக் லீச் 15, ஜேம்ஸ் ஆண்டா்சன் 0, ஆலி போப் 5 பவுண்டரிகளுடன் 73 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

இறுதியில் மேத்யூ பாட்ஸ் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருக்க, தென்னாப்பிரிக்க பௌலிங்கில் ககிசோ ரபாடா 3, மாா்கோ யான்சென் 1 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா, 56 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் சோ்த்திருந்தது. ராஸி வான் டொ் டுசென் 19, மாா்கோ யான்சென் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். கேப்டன் டீன் எல்கா் 47, சாரெல் எா்வீ 6 பவுண்டரிகளுடன் 73, கீகன் பீட்டா்சன் 24, எய்டன் மாா்க்ரம் 16 ரன்கள் சோ்த்தனா்.

இங்கிலாந்து பௌலிங்கில் பென் ஸ்டோக்ஸ் 2, ஜேம்ஸ் ஆண்டா்சன், ஜேக் லீச், மேத்யூ பாட்ஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் 42 டிகிரி வரை அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

SCROLL FOR NEXT