செய்திகள்

மகளிர் எஃப்டிபி: இந்தியாவுக்கு இரு டெஸ்டுகள்!

16th Aug 2022 04:06 PM

ADVERTISEMENT

 

மகளிர் கிரிக்கெட்டுக்கான 2022-25 காலக்கட்டத்துக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது ஐசிசி.

இந்திய அணி இக்காலக்கட்டத்தில் (மே 2022 முதல் ஏப்ரல் 2025) 27 ஒருநாள், 36 டி20, 2 டெஸ்டுகளில் விளையாடவுள்ளது. இங்கிலாந்து (5), ஆஸ்திரேலியா (4), தென்னாப்பிரிக்கா (3) ஆகிய அணிகள் இந்தியாவை விடவும் அதிக டெஸ்டுகளில் விளையாடவுள்ளன. 

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் இந்தியாவில் தலா 1 டெஸ்டை விளையாடவுள்ளன. இந்த அட்டவணையில் ஒவ்வொரு வருடத்திலும் மார்ச் முதல் மே வரை இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாதங்களில் அனைத்து வீராங்கனைகளும் மகளிர் ஐபிஎல், ஹாங்காங்கின் டி20 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். 

ADVERTISEMENT

எஃப்டிபி எனப்படும் கிரிக்கெட் அட்டவணை முதல்முறையாக மகளிர் கிரிக்கெட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் 7 டெஸ்டுகள், 159 டி20, 135 ஒருநாள் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT