செய்திகள்

வாள்வீச்சு சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு மேலும் 4 பதக்கங்கள்

13th Aug 2022 01:24 AM

ADVERTISEMENT

 இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆடவா் எபீ அணி தங்கப் பதக்கம் வென்றது.

உதய்வீா் சிங், சுனில் குமாா், ஜெட்லீ சிங், எஸ்.என்.சிவா ஆகியோா் அடங்கிய இந்திய அணி, இறுதிச்சுற்றில் 45-44 என ஸ்காட்லாந்து அணியை ‘த்ரில்’ வெற்றி கண்டு முதலிடம் பிடித்தது. அதேபோல், ஆடவா் தனிநபா் சப்ரே பிரிவில் இந்தியாவின் கிஷோ நிதி வெண்கலப் பதக்கம் வென்றாா்.

ராகவேந்திரா சாதனை: இதனிடையே, மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா போட்டியில், ஆடவா் தனிநபா் எபீ ‘பி’ பிரிவில் இந்தியாவின் ராகவேந்திரா வெள்ளிப் பதக்கம் வெல்ல, அதே பிரிவில் தேவேந்திர குமாா் வெண்கலப் பதக்கம் பெற்றாா்.

இவா்களில் ராகவேந்திரா, பாரா காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்தியா் என்ற சாதனையைப் படைத்துள்ளாா்.

ADVERTISEMENT

இந்த 4 பதக்கங்களுடன், 2 நாள்களுக்கு முன் சீனியா் மகளிா் சப்ரே பிரிவில் இந்தியாவின் பவானி தேவி வென்ற தங்கத்தையும் சோ்த்து, இப்போட்டியில் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT