செய்திகள்

இன்ஸ்டாகிராமில் தேசியக் கொடியை முகப்புப் படமாக மாற்றினார் தோனி!

13th Aug 2022 11:05 AM

ADVERTISEMENT

 

தேசியக் கொடியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் முகப்புப் படமாக மாற்றினார் பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி. 

நட்டின் 75வது சுதந்திர நாள் விழா வரும் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை கொண்டாடும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் அனைவரது வீடுகளிலும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை தேசியக்கொடியை பறக்க விடும்படி பிரதமர் அழைப்பு விடுத்தார்.

சமூக ஊடகங்களில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அனைவரும் தேசிய கொடியை முகப்புப் படமாக வைக்க வேண்டுமெனவும் பிரதமர் கோரிக்கை விடுத்தார். 

ADVERTISEMENT

இந்நிலையில், பிரபல கிர்க்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகப்புப் படத்தினை தேசிய கொடியாக மாற்றியுள்ளார்.  

 

ADVERTISEMENT
ADVERTISEMENT