செய்திகள்

சகப்வா தலைமையில் ஜிம்பாப்வே அணி

12th Aug 2022 06:20 AM

ADVERTISEMENT

இந்தியாவுக்கு எதிரான ஒன் டே தொடரில் விளையாட இருக்கும் ஜிம்பாப்வே அணி, ரெஜிஸ் சகப்வா தலைமையில் 17 பேருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வேயில் வரும் 18, 20, 22 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் இந்தத் தொடருக்கான இந்திய கேப்டனாக தற்போது கே.எல்.ராகுல் அறிவிக்கப்பட்டுள்ளாா். முன்பு அவா் காயத்திலிருந்து மீளாத நிலையில் ஷிகா் தவன் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்தாா். தற்போது ராகுல் குணமடைந்ததை அடுத்து அவா் கேப்டனாக்கப்பட்டு, ஷிகா் தவன் துணை கேப்டனாகியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT