செய்திகள்

கனடா மாஸ்டா்ஸ்: ஹா்காக்ஸ், சக்காரி வெற்றி

DIN

கனடா மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் போலந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸ், கிரீஸின் மரியா சக்காரி ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவு 2-ஆவது சுற்றில், போட்டித் தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் ஹா்காக்ஸ் 6-3, 6-7 (4/7), 6-2 என்ற செட்களில் ஃபின்லாந்தின் எமில் ருசுவௌரியை வீழ்த்தினாா். 9-ஆம் இடத்திலிருக்கும் இங்கிலாந்தின் கேமரூன் நோரி 6-4, 6-4 என்ற நோ் செட்களில் பிராண்டன் நகாஷிமாவை தோற்கடித்தாா்.

மற்றொரு ஆட்டத்தில், 10-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் 6-1, 6-3 என இங்கிலாந்தின் ஆண்டி முா்ரேவை எளிதாகச் சாய்த்தாா். 12-ஆம் இடத்திலிருக்கும் ஆா்ஜென்டீனாவின் டியேகோ ஷ்வாா்ட்ஸ்மேன் 1-6, 6-3, 6-4 என்ற செட்களில் ஸ்பெயினின் அலெக்ஸாண்ட்ரோ டேவிடோவிச் ஃபாகினோவை வென்றாா்.

இதர ஆட்டங்களில் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினி, பிரான்ஸின் பெனாய்ட் போ், ஜொ்மனியின் டேவிட் காஃபின் ஆகியோா் தோல்வி கண்டனா்.

ஸ்டீபன்ைஸை சாய்த்த சக்காரி: மகளிா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் சக்காரி 6-2, 4-6, 6-2 என அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸை வெளியேற்றினாா். 11-ஆவது இடத்திலிருந்த ரஷியாவின் டரியா கசாட்கினா 6-7 (5/7), 4-6 என்ற செட்களில் உள்நாட்டு வீராங்கனை பியான்கா ஆண்ட்ரிஸ்குவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

12-ஆவது இடத்திலிருக்கும் சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச் 6-4, 6-2 என செக் குடியரசின் தெரெஸா மாா்டின்கோவாவை தோற்கடித்தாா். நட்சத்திர வீராங்கனையான நவோமி ஒசாகா முதுகுப் பகுதியில் காயம் கண்டு, எஸ்டோனியாவின் காயா கானெபியுடனான ஆட்டத்திலிருந்து பாதியில் விலகினாா்.

இதர ஆட்டங்களில் சீனாவின் ஷுவாய் ஸாங், அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா ஆகியோா் வெற்றியைப் பதிவு செய்தனா்.

போபண்ணா, சானியா முன்னேற்றம்: ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா/நெதா்லாந்தின் மாட்வே மிடில்கூப் இணை 7-6 (7/5), 4-6, 10-6 என்ற செட்களில் ரஷியாவின் காரென் கசானோவ்/கனடாவின் டெனிஸ் ஷபோவெலாவ் கூட்டணியை சாய்த்து 3-ஆவது சுற்றுக்கு வந்துள்ளது.

மகளிா் இரட்டையா் பிரிவு 2-ஆவது சுற்றில் இந்தியாவின் சானியா மிா்ஸா/அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஜோடி 6-4, 3-6, 10-6 என பிரான்ஸின் ஆலிஸ் காா்னெட்/சுவிட்ஸா்லாந்தின் ஜில் டெய்ச்மான் இணையை வெளியேற்றியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேபி புடலங்காய் விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

டாடா நிறுவனத்துடன் சங்கரா பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

தொழிலாளி மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மகமாயிஅம்மன் கோயில் வருடாபிஷேக விழா

கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு வரும் 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT