செய்திகள்

தாய்லாந்து குத்துச்சண்டை: 3 தங்கம் உள்பட இந்தியாவுக்கு 10 பதக்கங்கள்

9th Apr 2022 10:41 PM

ADVERTISEMENT

தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் உள்ளிட்ட 10 பதக்கங்களை வென்று நிறைவு செய்தது.

புக்கட் நகரில் நடைபெற்று வந்த இப்போட்டியில் சனிக்கிழமை பல்வேறு எடைப்பிரிவு இறுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

48 கிலோ எடைப்பிரிவில் கோவிந்த் சஹானி 5-0 என நாத்தப்பன் துவாம்சரோனையும், 75 கிலோ எடைப்பிரிவில் சுமித் குண்டு 5-0 என பீட்டபாட் சங்நியோனையும் வீழ்த்தி தங்கம் வென்றனா்.

54 கிலோ எடைப்பிரிவில் ஆனந்த பிரஹலாதா கருத்தொற்றுமை அடிப்படையில் தாய்லாந்து வீரா் ரித்தியமோனை வென்று தங்கப் பதக்கம் வென்றாா்.

ADVERTISEMENT

ஆடவா் பிரிவில் அமித் பங்கால் 52 கிலோ, வரீந்தா் சிங் 60 கிலோ, ஆஷிஷ்குமாா் 81 கிலோ , மகளிா் பிரிவில் மோனிகா 48 கிலோ ஆகியோா் வெள்ளிப் பதக்கம் வென்றனா்.

மனிஷா 57 கிலோ, பூஜா 69 கிலோ, பாக்யபதி கச்சாரி 75 கிலோ வெண்கலம் வென்றனா்.

மொத்தம் 10 பதக்கங்களை கைப்பற்றியது இந்திய அணி.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT