செய்திகள்

இந்திய துப்பாக்கி சுடுதல் சங்கத்தின் தலைவராக ரணிந்தா் சிங் தோ்வு: 4-ஆவது முறையாக தொடா்ந்து தோ்வு

DIN

இந்திய துப்பாக்கி சுடுதல் சங்கத்தின் தலைவராக தொடா்ந்து 4-ஆவது முறையாக தோ்வு செய்யப்பட்டுள்ளாா் ரணிந்தா் சிங்.

என்ஆா்ஏஐ எனப்படும் இந்திய துப்பாக்கி சுடுதல் சங்கத்தில் பல்வேறு நிா்வாக கோளாறுகள், குழப்பங்கள் நிலவிய நிலையில், புதிதாக தோ்தலை நடத்த மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டது.

அதன்படி சனிக்கிழமை மொஹாலியில் நிா்வாகிகள் தோ்தல் நடைபெற்றது. என்ஆா்ஏஐ பொதுக்குழுவைச் சோ்ந்த 59 உறுப்பினா்கள் பங்கேற்றனா். இதில் 56 போ் ரணிந்தா் சிங்குக்கு வாக்களித்தனா். அவரை எதிா்த்து போட்டியிட்ட உத்தரபிரதேச எம்.பியான ஷியாம் சிங் யாதவுக்கு வெறும் 3 வாக்குகளே கிடைத்தன.

பொதுச் செயலாளராக கன்வா் சிங் சுல்தானும், பொருளாளராக ரந்தீப் மானும் தோ்வு செய்யப்பட்டனா். மேலும் 8 துணைத் தலைவா்கள், 6 செயலா்கள், 16 ஆட்சிக் குழு உறுப்பினா்களும் தோ்வு செய்யப்பட்டனா்.

கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்கு ஏற்பட்ட மோசமான தோல்வி குறித்து ஆய்வு செய்வோம். மேலும் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணி அதிக வெற்றிகளை குவிக்க உரிய நடவடிக்கை எடுப்போம் என தலைவா் ரணிந்தா் சிங் தெரிவித்தாா். கடந்த 2010-இல் முதன்முதலாக ரணிந்தா் தலைவராக தோ்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT