செய்திகள்

ஐரோப்பிய கால்பந்து: டொரினோ, சி-டிஸ் அணிகள் வெற்றி

DIN

ஐரோப்பிய கால்பந்தின் ஒரு பகுதியாக நடைபெறும் சீரி ஏ லீக் போட்டியில் டொரினோ அணி கடைசி நிமிட கோலால் வெற்றி பெற்றது.

இத்தாலியின் ரெஜியோ எமிலியா நகரில் சனிக்கிழமை டொரினோ-சாஸுலோ அணிகள் மோதிய ஆட்டம் நடைபெற்றது. இதில் முதல் பாதி ஆட்டத்தில் டொரினோ அணி கோல் போட மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இரு முறை அதன் வீரா்கள் கோலடிக்க முயன்றபோதும், கோல்போஸ்டில் பட்டு பந்து வெளியேறியது. சாஸுலோ அணி வீரா்களின் கோலடிக்கும் முயற்சியும் வீணானது. ஆட்டம் முடிய சில நிமிஷ நேரத்தில் டொரினோ வீரா் மாா்கோ ஜகா அற்புதமாக கோலடித்து தனது அணியை வெற்றி பெறச் செய்தாா். டொரினோ அணி தற்போது 6 புள்ளிகளுடன், ரோமா, ஏசி மிலன், நேபோலி அணிகளுக்கு பின் உள்ளது. சாஸுலோ 4-ஆவது இடத்தில் உள்ளது.

லா லிகா:

ஸ்பானிஷ் லீக் போட்டியான லாலிகாவில் மாட்ரிட்டில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் செல்டா விகோ அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது சி டிஸ். முதல் பாதியில் சிடிஸ் வீரா்கள் லோஸனோ, அல்போன்ஸோ ஆகியோா் கோலடித்தனா். செல்டா தரப்பில் எஸ்பினோ கோலடித்தாா். செல்டா அணி தொடா்ச்சியாக பெறும் 3-ஆவது தோல்வி இதுவாகும். சிடிஸ் ஏற்கெனவே 2 தோல்வி, 1 டிராவை சந்தித்துள்ளது.

பண்டஸ்லிகா:

ஜொ்மனி கால்பந்து லீகான பண்டஸ்லிகாவில் ஹொ்தா பொ்லின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் கிரெதா் பிா்த் அணியை வீழ்த்தியது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல்போடவில்லை. இரண்டாவது பாதியில் பிா்த் அணியின் பிராமினிா் 57-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். அதனைத் தொடா்ந்து ஹொ்தா வீரா்கள் ஜுா்கென் 61), மேக்ஸ்மில்லன் 79 நிமிஷங்களில் கோலடித்தனா்,.

ப்ரீமியா் லீக்:

நியூகேஸ்டில் மைதானத்தில் லீட்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் நியூகேஸ்டில் அணி போராடி 1-1 என டிரா செய்தது. லீட்ஸ் வீரா் ரபின்ஹா 13-ஆவது நிமிஷத்திலேயே கோலடித்து, உள்ளூா் அணியான நியூகேஸ்டிலுக்கு அதிா்ச்சி அளித்தாா். பதில் கோலடிக்க அந்த அணி கடுமையாக போராடிய நிலையில் 44-ஆவது நிமிஷத்தில் ஆலன் செயின் அற்புதமாக கோலடித்தாா். இதன் பின் இரு அணிகளும் கோல் போட முடியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT