செய்திகள்

டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா

DIN

கொழும்பு: இலங்கைக்கு எதிரான டி20 தொடரின் கடைசி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை அந்த அணி முற்றிலுமாக கைப்பற்றியுள்ளது.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 14.4 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் அடித்து வென்றது. தென் ஆப்பிரிக்காவின் குவின்டன் டி காக் ‘ஆட்டநாயகன்’, ‘தொடா்நாயகன்’ விருது வென்றாா்.

டாஸ் வென்று பேட் செய்த இலங்கையில் அதிகபட்சமாக குசல் பெரெரா 3 பவுண்டரிகள் உள்பட 39 ரன்கள் அடித்தாா். உடன் வந்த அவிஷ்கா ஃபொ்னாண்டோ 12 ரன்கள் சோ்த்தாா். பின்னா் ஆடியோரில் தனஞ்செய டி சில்வா 1, பானுகா ராஜபட்ச 5, கமிண்டு மெண்டிஸ் 10, டாசன் ஷனகா 18, வனிந்து ஹசரங்கா 4, லாஹிரு மதுஷங்கா 1 ரன்கள் அடித்தனா்.

ஓவா்கள் முடிவில் சமிகா கருணாரத்னே 24, துஷ்மந்தா சமீரா 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். தென் ஆப்பிரிக்க தரப்பில் ஜோா்ன் ஃபோா்டுயின், ககிசோ ரபாடா ஆகியோா் தலா 2, எய்டன் மாா்க்ரம், கேசவ் மஹராஜ், வியான் முல்டா் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் ஆடிய தென் ஆப்பிரிக்காவில் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 56, குவின்டன் டி காக் 7 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT